தம்பியை கதாநாயகன் ஆக்கிய ராகவா லாரன்ஸ்!


நடிகரும், டைரக்டருமான ராகவா லாரன்சின் தம்பி, எல்வின். இவர், ‘காஞ்சனா-2’ படத்தில் ராகவா லாரன்சுடன் ஒரு பாடல் காட்சியில் ஆடி இருந்தார். அப்போதே இவர் கதாநாயகன் ஆகிவிடுவார் என்ற தகவல் பரவியது. அதற்கான நேரம் இப்போது வந்து விட்டதாக ராகவா லாரன்ஸ் கூறுகிறார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:

“ஒவ்வொரு வருடமும் என் தம்பி எல்வின் பிறந்த நாள் அன்று அவனுக்கு ஏதாவது ஒரு பரிசு கொடுப்பேன். இந்த வருடம் பிறந்த நாளில் அவனை கதாநாயகனாக உயர்த்தி, அவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறேன்.

அவனுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும்,bஅதுவும் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று ஆசை. இதில் என்னுடைய ஆசையும் இருந்தது. அவனை நடிகர் ஆக்கிப்பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். இதற்காக நல்ல ஒரு கதையை தேடிக்கொண்டிருந்தேன். அப்படி ஒரு கதை இப்போது தான் அமைந்து இருக்கிறது.

இந்தக் கதையை ராகவேந்திரா நிறுவனம் சார்பில் படமாக்குகிறோம். ராஜா டைரக்டு செய்வார். எல்வின் கதாநாயகனாக நடிப்பார். கதாநாயகி முடிவாகவில்லை.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here