தாராள மனப்பான்மையுடன் நடவுங்கள்: தோட்ட கம்பனி உரிமையாளர்களிடம் மஹிந்த கோரிக்கை!

பெருந்தோட்ட மலையக தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் கம்பனிகள் தாராள மனப்பான்மையுடன் சிந்தித்து, எதிர்வரும் வாரங்களுக்குள் யோசனை முன்வைக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தோட்ட கம்பனி உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் இறுதி தீர்மானத்தை எடுப்பது அடுத்த வரவு – செலவு திட்டத்தில் அரசாங்கம் தீர்மானம் எடுப்பது இலகுவாக அமையும். தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 750 ரூபா, மேலதிக கொடுப்பனவு, உற்பத்தி கொடுப்பனவு மற்றும் வரவுக்கான கொடுப்பனவு ஆகிய அனைத்து கொடுப்பனவுகளையும் இணைத்து வழங்குமாறு இலங்கை தொழிலாளர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தோட்ட கம்பனி உரிமைகளுடன் பிரதமர் இன்று அலரிமாளிகையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

கொவிட்- 19 வைரஸ் பரவல் காரணமாக பூகோள பொருளாதார நெருக்கடியினால் தோட்ட கம்பனிகள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு இலங்கை சேவையாளர் சங்கத்தினர் பிரதமரிடம் கேட்டுக் கொண்டனர்.

மலையக பெருந்தோட்ட மக்களின் சம்பள விவகாரம் தொடர்பில் தோட்ட உரிமையாளர்கள் தாராள மனப்பான்மையுடன் ஒரு தீர்மானத்திற்கு வந்து அதனை எதிர்வரும் வாரங்களுக்குள் முன்வைக்குமாறு பிரதமர் கம்பனி உரிமையாளர்களிடம் இதன் போது கோரிக்கை விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here