2007 ஆக உயர்ந்தது கொரோனா தொற்று!

இன்று மேலும் 6 பேர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளனர். இதன்மூலம், நாட்டில் கொரோனா தொற்றிற்குள்ளாகியவர்கள் எண்ணிக்கை 2007 ஆக உயர்ந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்டவர்கள் கடற்படையை சேர்ந்தவர்கள்.

இதேவேளை, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மேலும் 40 பேர் இன்று குணமடைந்து வெளியேறினர்.

வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் ஒருவர், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் ஒருவர், ஹோமாகம வைத்தியசாலையில் ஒருவர், மினுவங்கொட வைத்தியசாலையில் 15 பேர், ஹம்பாந்தோட்ட வைத்தியசாலையில் 7 பேர் மற்றும் தெல்தெனிய வைத்தியசாலையில் 7 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

இதன்மூலம் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1602 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 394 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here