நிகழ்வை ஏற்பாடு செய்துவிட்டு காத்திருந்த மாணவர்கள்: வீதியால் பறந்து சென்ற வடக்கு ஆளுனர்!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கல்விக் கோட்டத்துக்குட்பட்ட வள்ளிபுனம் மகா வித்தியாலயத்தில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டடமொன்று இன்று (25) வடக்கு ஆளுனர் திறந்து வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், பாடசாலை வீதியால் சென்ற ஆளுனர், பாடசாலை நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

இந்த நிகழ்வில், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பிற்பகல் 12.30 மணிக்கு முன்னதாகவே செய்து முடித்துவிட்டு, ஆசிரியர்களும் மாணவர்களும் பாடசாலை வளாகத்தில் காத்திருந்தனர்.

இந்நிலையில், பிற்பகல் 1.50 மணியளவில் பாடசாலையைத் தாண்டி சென்ற ஆளுநர், முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் நோக்கிச் சென்றுள்ளார். அங்கு நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள செல்கிறார்.

ஆளுநர் பாடசாலையைக் கடந்து சென்றபோதும், உரிய திட்டமிடல் இல்லாததால் மாணவர்களும் ஆசிரியர்களும் சிரமத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here