இருக்கும் கட்சியில் இருந்து கொண்டே இன்னொரு கட்சிக்கு தாவும் வல்லமை கொண்டவர்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர், அந்தர் பல்டியடித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்துள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தலைமையில், திருகோணமலையில் உள்ள இவருடைய இல்லத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, இந்த தாவல் இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் 4ஆம் இலக்கம் கொண்ட பேரின்பவரதன் லக்மன் என்பவரே, இவ்வாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இணைந்துகொண்டார்.

இவர் நேற்று முன்னணியின் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு புகைப்படம் எடுத்திருந்தார். இன்று காலையில் கட்சி தாவி கூட்டமைப்பு தலைவருடன் புகைப்படம் எடுத்துள்ளார்.

பெருந்தொகை பணத்தை பெற்றுக்கொண்டு அவர் கட்சி தாவியதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here