கருணாவை நாம்தான் பிரித்தோம்; ஆனால் அரசியலுக்கு பாவிக்கவில்லை: ஐ.தே.க!

புலிகளிடமிருந்து கருணாவை நாங்கள்தான் பிரித்தோம். ஆனால் அவரிடமிருந்து அரசியல் ஆதாயத்தை பெற்றுக்கொள்ளவில்லையென தெரிவித்துள்ளார் ஐ.தே.கவின் முன்னாள் எம்.பி, ஆசு மாரசிங்க.

நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை தெரிவித்தார்.

“கருணாவை புலிகள் அமைப்பிலிருந்த பிரிக்க நாம் செயற்பட்டோம் என்பது உண்மைதான். ஆனால் புலிகளை நாம் அரசியல் ஆதாயத்திற்கு பாவிக்கவில்லை. கருணாவை நாங்கள் நாடாளுமன்றத்திற்கு நியமிக்கவில்லை. அவரை வேட்பாளராகவும் நியமிக்கவில்லை.

அவருடனான அரசியல் தொடர்பை அப்பொழுதே நாம் முறித்துக் கொண்டு விட்டோம். அவருடன் எந்த விதத்திலும் நாம் தொடர்புபட்டிருக்கவில்லை“ என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here