அக்கராயன் மக்களின் தலை தப்பியது: கொரோனா வைத்தியசாலை பணியை நிறுத்த உத்தரவு!

கொழும்பு சுகாதார அமைச்சு வடக்கில் அக்கராயன்குளம் வைத்தியசாலையினை கொரனா சிகிச்சை நிலையமாக மாற்றும் முடிவினைக் கைவிடுமாறு வடக்கின் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு நேற்று (24) அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக மிகவும் நம்பகமாகத் தெரியவருகிறது.

கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சரவணபவன் அவர்கள் பொதுமக்களால் வழங்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் மாவட்ட அரச அதிபரினால் வழங்கப்பட்ட அறிக்கை என்பவற்றுடன் தமது பிரத்தியேக அறிக்கையினையும் சுகாதார அமைச்சின் உயரதிகாரிகளிடம் நேரில் சென்று கையளித்து விளக்கம் அளித்ததனை அடுத்தே மத்திய சுகாதார அமைச்சு இந்த முடிவினை எடுத்துள்ளதாக விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அக்கராயன்குளம் வைத்தியசாலையினை கொரனா சிகிச்சை மையமாக மாற்றும் முடிவினை தன்னிச்சையாக வடக்கில் உள்ள சில உயரதிகாரிகளே எடுத்ததாகவும், தமக்கும் அந்த முடிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் இம்முடிவினால் மக்கள் எதிர்நோக்கவுள்ள பிரச்சினைகள் குறித்து கிளிநொச்சி முன்னாள் பா.உ சந்திரகுமார் அனுப்பி வைத்த கடிதத்தின் ஊடாக ஏற்கெனவே தாம் அறிந்திருந்ததாகவும் இருப்பினும் வடக்கின் சில உயரதிகாரிகளே முடிவினை மாற்றாது அழுங்குப்பிடியாகச் செயற்பட்டதாகவும் மத்திய சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட உயரதிகாரிகள் தெளிவாக தெரித்தனராம் என அவ்வட்டாரங்கள் மேலும் கூறின.

இதனிடையே அக்கராயனில் அமைய உத்திதேசித்த கொரனா வைத்தியசாலைக்கு படையினரை பாதுகாப்பிற்கு வழங்கமாறு கோரும் அளவிற்கு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் மும்முரமாக இவ்விடயத்தில் மும்முரமாக ஈடுபட்டதும் பணிப்பாளருக்கு அவ்வாறு எல்லை கடந்து செயற்படுவதற்குரிய முழு அதிகாரங்களையும் வழங்கியிருந்தவர் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரே என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here