ஹரீன், வடிவேல் சுரேஷ் மீதான இடைக்கால தடைகளில் ஒன்று நீக்கம்!

இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஹரீன் பெர்னாண்டோ, செயலாளர் வடிவேல் சுரேஷ் ஆகியோருக்கு எதிராக விதிக்கப்பட்ட 3 இடைக்கால தடை உத்தரவுகளில், ஒன்றை விலக்கிக் கொள்ள கொழும்பு மாவட்ட நீதிபதி உத்தவிட்டார்.

தம்மீதான இடைக்கால தடையால், சங்கத்தின் பணியாளர்களிற்கு சம்பளம் வழங்க முடியாதுள்ளதாக, அவர்கள் தொடர்ந்த வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சம்பளம் வழங்குவது தடை உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை கருத்தில் கொண்டு, தடை உத்தரவு ஒன்றை தளர்த்திய மாவட்ட நீதிபதி, சங்கத்தின் நிலையான வைப்பு மற்றும் வாகனங்களை பாவிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீடித்தார்.

சங்கத்தின் அன்றாட வங்கிக் கொடுப்பனவு நடவடிக்கையை மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடையை மாத்திரம் நீதிபதி நீக்கினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here