2025 முதல் 2031 வரை விஜய் நடிக்கும் எல்லாப் படங்களும் வெற்றி பெறும்: ஜோதிடர் பாலாஜி ஹாசன்

நடிகர் விஜய்யின் எதிர்காலம் குறித்து பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் கணித்துள்ளார்.

யூடியூப் தளத்தில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் விஜய்யின் எதிர்காலம் குறித்து கூறியுள்ளதாவது:

விஜய்யின் ஜாதகத்துக்கு 2032 வரை சுக்கிர திசை நடக்கிறது. அதுவரைக்குமே சீரான முன்னேற்றம் கொள்வார். 2025 முதல் 2031 வரை ஆறேழு வருடங்களுக்கு வருடத்துக்கு அதிகபட்சமாக இரு படங்களில் மட்டுமே நடிப்பார். இந்தக் காலகட்டத்தில் விஜய் நடிப்பில் வெளிவரும் அனைத்து படங்களும் வெற்றி பெறும். இந்தச் சமயத்தில் 15 படங்களில் நடித்தால் 14 பெரிய வெற்றி பெறும். மற்றவர்களின் ஜாதகம் சரியாக அமையாமல் போனால் மட்டுமே ஒரு படம் வெற்றி பெறாமல் போகும். 2025-க்கு மேல் வசூல் சக்கரவர்த்தியாகத் திகழ்வார். உலகளவில் நட்சத்திரமாக ஜொலிப்பார். இந்தியாவின் முதல் 5 நடிகர்களில் விஜய் இடம்பிடிப்பார். ரசிகர் எண்ணிக்கை 3 மடங்கு அதிகமாகும்.

அரசியலில் விஜய் நுழைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அதற்கான காலம் இன்னும் உள்ளது. அடுத்த ஐந்து வருடங்களுக்கு இதைப் பற்றி யோசிக்கக் கூட மாட்டார். அவருடைய ரசிகர் வட்டம் மேலும் அதிகமாகும்போது 13 வருடத்துக்குப் பிறகு அரசியலுக்கு வருவதற்கான அடித்தள வேலைகளைத் தொடங்குவார் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here