அவுஸ்திரேலியாவில் கொரோனா 2ஆம் அலை?

ஒரு மாதத்திற்குப் பிறகு அவுஸ்திரேலியாவில் கொரோனாவுக்கு ஒருவர் பலியாகி உள்ளார். கொரோனா பரவல் தீவிரமடைவதை தொடர்ந்து, கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கு இராணுவம் அழைக்கப்பட்டள்ளது.

அவுஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணங்களில் ஒன்றான விக்டோரியாவில் மீண்டும் கொரோனா பரவ தொடங்கியுள்ளது. சுமார் ஒரே நாளில் 20 பேருக்கு அங்கு கரோனா உறுதிப்படுத்தபட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு கரோனோவுக்கு ஒருவர் பலியாகி உள்ளார்.

இதுவரை விக்டோரியாவில் 241 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், விக்டோரியா மாகாணத்தில் கொரோனா இரண்டாம் பரவல் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் கரோனா பரவல் 75% கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டுவரை எல்லை மூடலைத் தொடர இருப்பதாக அந்நாடு தெரிவித்திருந்தது.

அவுஸ்திரேலியாவில் மீண்டும் கொரோனா பரவல் தொடங்கியுள்ள நிலையில், அதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக இராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில், ”மெல்போர்ன் மற்றும் விக்டோரியா மாகாணத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. மேலும், கடந்த ஒருவாரமாக விக்டோரியா மாகாணத்தில் இரட்டை இலக்க எண்களில் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவலைத் தடுக்க இராணுவம் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விக்டோரியா மாகாண அரசின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “இராணுவ உதவியுடன் நிறைய பரிசோதனைகளைச் செய்து முடிவுகளை விரைவாகப் பெறலாம். நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் வீட்டிலேயே இருங்கள். பரிசோதனைகளைச் செய்யுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸால் இதுவரை 7,492 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,915 பேர் குணமடைந்துள்ளனர். 102 பேர் பலியாகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here