திருமணம் செய்யுமாறு நடிகையை மிரட்டிய பிரபல ரவுடிகள் கைது!


நடிகை பூர்ணாவை மிரட்டிய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் நடிகை பூர்ணா. கேரளாவை சேர்ந்த இவரது இயற்பெயர் ஷாம்னா காசிம். கோலிவுட்டில் நடிக்க வந்தபின்னர் தமிழக ரசிகர்களால் கவரப்பட்டார். இவர் தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் அறிமுகம் ஆனார்.

பின்னர், கந்தக்கோட்டை, ஆடு புலி, வித்தகன், கொடிவீரன், காப்பான் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர், தலைவி என்ற பெயரிலான மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட, மும்மொழியில் தயாராகும் படத்தில் முக்கிய வேடமேற்று நடித்து வருகிறார்.

இவரது தாயார் ரவுலா தனது மகளை 6 பேர் மிரட்டினர் என கேரளாவின் மராடு காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்து உள்ளார். இந்த புகாரில், நடிகை பூர்ணாவை முக்கிய குற்றவாளியான ரபீக் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு முன் வேறொருவரின் புகைப்படம் ஒன்றை நடிகை பூர்ணாவிடம் ரபீக் காட்டியுள்ளார். இதன்பின் கடந்த 3ந்தேதி, மற்ற குற்றவாளிகளுடன் கும்பலாக மராடுவில் உள்ள பூர்ணாவின் வீட்டுக்கு சென்ற ரபீக், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வேண்டியுள்ளார். பின்னர் பூர்ணாவின் வீடு, வாகனம் ஆகியவற்றை வீடியோ எடுத்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, நடிகை பூர்ணாவை ரபீக் மிரட்ட தொடங்கியுள்ளார். தனக்கு ரூ.1 லட்சம் பணம் தரவேண்டும். இல்லையெனில் பூர்ணாவின் தொழிலையே அழித்து விடுவேன் என கூறியுள்ளார் என புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த புகாரின்பேரில் போலீசார் உடனடியாக செயல்பட்டனர். இதில் ரபீக், சரத், அஷ்ரப் மற்றும் ரமேஷ் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here