நோயாளர் காவு வண்டி- மோட்டார் சைக்கிள் விபத்து: இளைஞன் பலி!

நோயாளர் காவு வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

இன்று (24) பிற்பகல் திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி இருதயபுரம் பகுதியில் விபத்து இடம்பெற்றது.

தோப்பூர், அல்லைநகர் பகுதியைச் சேர்ந்த ஜவாஹிர் மொஹமட் அஹ்ஸான் (25)என்பவரே உயிரிழந்துள்ளார்.

கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டி நோயாளர்களை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச் சென்று மீண்டும் வைத்தியசாலைக்கு திரும்பிச் செல்லும் போது விபத்திற்குள்ளானது.

தோப்பூர் பிரதேசத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த இளைஞர், நோயாளர் காவு வண்டியுடன் மோதி படுகாயமடைந்த நிலையில் மூதூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது மூதூர் தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்துடன் தொடர்புடைய நோயாளர் காவு வண்டி சாரதியை மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here