மஹிந்தானந்தவிடம் 6 பக்க வாக்குமூலம்!

முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேயிடம் இன்று (24) பொலிஸ் சிறப்பு புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இதன்பின்னர், நவலப்பிட்டியில் உள்ள மஹிந்தானந்தா அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு ஊடக மாநாட்டில் மஹிந்தானந்த உரையாற்றினார்.

2011 உலகக்கிண்ண இறுதிப் போட்டி குறித்து பொலிஸ் குழுவிடம் முறைப்பாடு பதிவு செய்ததாக அவர் தெரிவித்தார்.

தனது முறைப்பாடு 6 பக்கங்களை கொண்டிருந்ததாகவும், 8 ஆவணங்களை பொலிசாரிடம் கையளித்ததாகவும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் விசாரணையில் உள்ளதால் அதிகம் பேசவில்லையென்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here