மாகாணசபை தேர்தலில் தமிழ் அரசு கட்சியிடம் 3 ஆசனங்களை கோரும் வர்த்தக நிறுவனம்!


தென்னிலங்கை அரசியலில் கிளி மகாராஜா செல்வாக்கை செலுத்துவதை போல, தமிழ் அரசியலிலும் புலம்பெயர் பெரும் தனவந்தர் ஒருவர் செல்வாக்கு செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் சார்ந்த நிறுவனத்திற்கு, மாகாணசபை தேர்தலில் 3 ஆசனங்களை ஒதுக்கித் தருமாறு இலங்கை தமிழ் அரசு கட்சி தலைமையிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது.

கிளி மகாராஜா நேரடியாக அரசியலில் ஈடுபடா விட்டாலும், அவரது ஊடக நிறுவனத்தை சேர்ந்தவர்கள் அரசியலுக்கு “வருவது“ சகஜம். அதன் பின்னணி என்னவென்பது, விடயமறிந்தவர்களிற்கு தெரியும். அந்தவகையில், யாழில் சஜித் அணியிலும் ஒரு பெண் வேட்பாளர் போட்டியிடுகிறார்.

இந்த வகையில், தமிழ் தேசிய அரசியலில் புலம்பெயர் பிரபல தமிழ் வர்த்தகர் ஒருவர் களமிறங்கியுள்ளார்.

அவரது நிறுவனம் சார்பில் எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் 3 ஆசனங்களை இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமையிடம் கோரப்பட்டுள்ளது. யாழில் 2, கிளிநொச்சியில் 1 ஆசனம் கோரப்பட்டுள்ளது.

அந்த மூன்று ஆசனங்களில் தம்மால் களமிறக்கப்படவுள்ளவர்களின் விபரங்களும் கட்சி தலைமையிடம் கலந்துரையாடப்பட்டுள்ளது. அந்த பெயர் விபரங்களை தமிழ்பக்கம் அறிந்திருந்தாலும், அதனை இப்பொழுது பகிரங்கப்படுத்தவில்லை.

இந்த கோரிக்கை கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிடமும் விடப்பட்டுள்ளதாக அறிய வருகிறது. அதேவேளை, கட்சியின் வேறு சில பிரமுகர்களுடனும் நிறுவனம் சார்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

3 ஆசனங்களை ஒதுக்கும் பட்சத்தில் தேர்தல் நிதியாக பெருந்தொகை வழங்கவும் வர்த்தகர் தரப்பினால் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here