அமெரிக்காவிலிருந்து வந்த 49பேர் வவுனியாவில் தங்கவைப்பு!

கொரோனோ வைரஸ் தாக்கம் காரணமாக பல்வேறு நாடுகளிலும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும் செயற்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அமெரிக்காவில் சிக்கித் தவித்த 217 இலங்கையர்கள் விசேட விமானங்களின் மூலம் இன்று நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

அவர்களில் 49 பேர் வவுனியா பெரியகாடு இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரொனோ வைரஸ் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் மூலமாக இன்று மதியம் குறித்த பயணிகள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் விமான நிலையத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here