சாவகச்சேரியில் வர்த்தகரிற்கு வாள்வெட்டு!

சித்தரிப்பு படம்

சாவகச்சேரி அல்லாரை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் வர்த்தகர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று (23) இரவு இந்த வாள்வெட்டு சம்பவம் நடந்தது.

கட்டட பொருள் வர்த்தக நிலைய உரிமையாளரான கு.அஜந்தன் (41) என்பவரே காயமடைந்துள்ளார்.

அவரது வர்த்தக நிலையத்தில் பொருள் கொள்வனவு செய்யவுள்ளதாக தொலைபேசியில் அழைத்து, இந்த வாள்வெட்டு இடம்பெற்றது.

வர்த்தகரின் இரண்டு காலிலும் வாளால் வெட்டப்பட்டது. இதில் இரண்டு கால் எலும்புகளும் முறிந்து படுகாயமடைந்துள்ளார்.

அவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here