கபிலநிற தாவர தத்திகளை கட்டுப்படுத்துவது தொடர்பான கருத்தரங்கு

வாழைச்சேனை கமநல சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கபிலநிற தாவர தத்திகளை கட்டுப்படுத்துவது தொடர்பான கருத்தரங்கு காவத்தமுனை மஸ்ஜுதுல் நிஹ்மா பள்ளிவாயலில் இன்று இடம்பெற்றது.

வாழைச்சேனை கமநல சேவைகள் திணைக்கள விவசாய போதனாசியர் எம்.ஜமால்டீன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் பள்ளிமடு மற்றும் அடம்படிவட்டுவான கண்டத்திலுள்ள விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது நெற்செய்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் கபில நிற தாவர தத்திகள் (அறக்கொட்டி) கட்டுப்படுத்தும் நடைமுறைகள் தொடர்பில் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், இதனை கட்டுப்படுத்துவதற்கு எவ்வாறான களை நாசினிகள் தெளிக்க வேண்டும் என்பது தொடர்பிலும் விவசாய போதனாசியர் எம்.ஜமால்டீனால் கருத்துக்கள் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here