தென்னாபிரிக்க அணியில் 7 பேருக்கு… பாகிஸ்தான் அணிக்கு 3 பேருக்கு கொரோனா!

தென்னாபிரிக்கா அணியில் 7 பேருக்கும், பாகிஸ்தான் அணியில் 3 வீரர்களுக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்க கிரிக்கெட் வாரியம் சார்பில் ஒப்பந்த வீரர்கள், பணியாளர்கள் உட்பட 100 பேருக்கும் மேல் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. கொரோனா சோதனையில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு தெரியவந்துள்ளது.

ஆனால் தென்னாபிரிக்க நாட்டு மருத்துவ விதிகளின் படி கொரோனா பாதிப்பு நோயாளிகள் பெயர்களை வெளியிடக்கூடாது. சம்பந்தப்பட்டவர்களுக்குத் தகவல் தெரிவித்து விட்டதாக தென்னாபிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஷதாப் கான், ஹைதர் அலி, மற்றும் ஹாரிஸ் ராவ்ஃப் ஆகிய வீரர்களுக்கு கொரோனா பொசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்த மூன்று வீரர்களுக்கும் கொரோனா அறிகுறிகளே இல்லை. டெஸ்ட் செய்த பிறகுதான் தொற்று இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த மூவரும் சுயதனிமைப் படுத்தலுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இமாத் வாசிம், உஸ்மான் சின்வாரி ஆகிய வீரர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இல்லை என்று தெரிந்தது.

ஜூன் 28ம் திகதி இங்கிலாந்து தொடருக்குச் செல்கிறது பாகிஸ்தான் அணி, 3 டெஸ்ட் 3 டி20யில் ஆடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here