கருணாவிற்கு வைரஸ் காய்ச்சலாம்: தேடிச் செல்கிறார்கள் பொலிசார்!

விநாயகமூர்த்தி முளிதரனை தேடி பொலிஸ் விசாரணைக்குழுக்கள் மட்டக்களப்பு, அம்பாறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அவரை சிஐடியில் முன்னிலையாகும்படி அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தபோதும், இதுரை அவர் சிஐடியில் முன்னிலையாகவில்லை.

சுகவீனம் காரணமாக தற்போது தன்னால் முன்னிலையாக முடியாது என்றும், குணமடைந்ததும் முன்னிலையாகுவதாகவும் தனது சட்டத்தரணி ஊடாக அறிவித்துள்ளார்.

தனக்கு வைரஸ் காய்ச்சல் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று நாவிதன்வெளியில் ஊடகச்சந்திப்பு நடத்துவதாக அவர் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. காலை 10 மணிக்கு ஊடகச்சந்திப்பு என குறிப்பிடப்பட்டிருந்தபோதும், அவர் அதற்கும் வரவில்லை.

இந்த நிலையிலேயே கருணாவை தேடி விசாரணைக்குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here