பண்டத்தரிப்பை சேர்ந்தவரே உயிரிழந்தார்!

யாழ்.ஆரியகுளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவத்தில் பற்றிமாதா வீதி பண்டத்தரிப்பை சேர்ந்த அருளப்பு லோகு (50) என்பரே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்திக்கு அண்மையில் யாழ்.பல்கலைகழக பேருந்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here