சஹ்ரான் கடல்வழியாக தப்பிச்செல்ல ரிஷாத்தின் சகோதரரே உதவினார்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் தம்பி உதவியதாக தகவல் வெளியாகியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளித்த முன்னாள் புலனாய்வுத்துறை பணிப்பாளர் இதனை தெரிவித்தார்.

சஹ்ரான் படகு மூலம் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல, ரிஷாத்தின் சகோதரர் உதவியதாக தெரிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு படகு வழியாக இந்தியாவிற்கு தப்பிச் சென்றதாக தெரிவித்துள்ளார்.

தற்போது சிஐடியின் காவலில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ரிஷார்ட் படியுதீனின் சகோதரரே இதற்கு உதவி செய்துள்ளதாகவும் முன்னாள் புலனாய்வு இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மனித கடத்தல் உட்பட சில விவகாரங்களிலும் அவர் ஈடுபட்டுள்ளார் என்று ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here