நீ கொலைகாரன்… சிறையிலிருக்க வேண்டியவன்: ஜோர்ஜ் .பிளொயிட் கொலையாளியை கடைக்குள் மடக்கிய பெண் (வீடியோ)

அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜோர்ஜ் ஃபிளொயிட் கொலை வழக்கில் பிணயில் விடுதலையான பொலிசார் ஒருவரை, சுப்பர் மார்க்கெட்டில் பெண்ணொருவர் மடக்கி சரமாரியாக கேள்வி கேட்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

ஜோர்ஜ் ஃபிளொயிட் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான J. Alexander Keung (26) என்பவர் 750,000 டொலர்கள் பிணைத்தொகை செலுத்தி பிணையில் வெளிவந்துள்ளார்.

பிணையில் வந்த மறுநாளே அவர் மின்னசோட்டாவிலுள்ள சுப்பர் மார்க்கெட்டுக்கு பொருட்கள் வாங்க வந்துள்ளார்.

அங்கு அவரை அடையாளம் கண்டு கொண்ட பெண் ஒருவர் தனது செல்போனில் அவரை வீடியோ எடுத்தபடி சரமாரியாக கேள்விகள் கேட்டார்..

நீங்கள் Keungதானே என்று அவர் கேட்க, ஆம் அது நான்தான் என்கிறார் அவர்.

நீங்கள் நேற்றுதான் சிறையிலிருந்து வெளியே வந்தீர்கள், அதற்குள் சொகுசாக எந்த குற்றமுமே செய்யாதவாறு கடைக்கு வந்துவிட்டீர்கள், அப்படித்தானே என்று அவர் கேட்டார்.

சொகுசாக என்றெல்லாம் கூற முடியாது, அத்தியாவசிய பொருட்களை வாங்க வந்தேன் என்கிறார் Keung.

அந்தப் பெண்- உங்களுக்கு அந்த உரிமை இல்லை என்று நான் நினைக்கிறேன். உங்களை ஜாமீனில் விட்டிருக்கக்கூடாது என்று நினைக்கிறேன் என்கிறார்.

அது எனக்கு புரிகிறது என்று கூறும் Keung, நீங்கள் அப்படி நினைத்தால், அதற்காக நான் வருந்துகிறேன் என்று கூற, அந்த வார்த்தைகள் அந்த பெண்ணை மேலும் கோபப்படுத்துகின்றன.

இல்லை, நீங்கள் வருந்தவில்லை என்று கோபத்துடன் கூறும் அந்த பெண், அந்த மனிதரைக் கொல்லாதது போல நீங்கள் இங்கே நிற்கிறீர்கள், மக்கள் உங்களை அடையாளம் காணமாட்டார்கள் என்று நினைக்கிறீர்களா என்கிறார்.

இங்கே நிற்பதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை, நீங்கள் கொஞ்சம் கூட உணர்ச்சிகளையே வெளிக்காட்டாமல் ஒருவரைக் கொன்றீர்கள், நீங்கள் இங்கே நிற்க உங்களுக்கு உரிமை இல்லை என்கிறார் அந்த பெண் தொடர்ந்து.

எனக்கு புரிகிறது என்று கூறிய வண்ணம் தனது பொருட்களுக்கான பணத்தை செலுத்துவதற்காக Keung செல்ல முயல, மீண்டும் இடைமறிக்கிறார் அந்த பெண்.

நீங்கள் பொருட்கள் வாங்குவது எங்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறும் அந்த பெண், நீங்கள் சிறையிலடைக்கப்பட வேண்டுமென்றே நாங்கள் விரும்புகிறோம் என்கிறார்.

நான் வாங்கிய பொருட்களுடன் நான் வெளியே போகிறேன் என்று Keung கூற, உடனே கடையிலுள்ள எல்லாரும் கேட்கும் வண்ணம், ஜோர்ஜ் கொலையில் தொடர்புடைய பொலிசாரில் இவர் ஒருவர் என கத்துகிறார் அந்த பெண்.

இப்படி நீங்கள் சொகுசாக மின்னசோட்டாவில் சுற்றப்போவதில்லை என்று கூறும் அந்த பெண், நீங்கள் மன்னிப்புக் கேட்கவும் விரும்பவில்லை என்பது எனக்குத் தெரியும் என்கிறார்.

உங்களால் எப்படி 750,000 டொலர்கள் பிணைத்தொகை செலுத்த முடிந்தது என்று அந்த பெண் விடாமல் அவரை மடக்க, பேசாமல் பணம் செலுத்தச் செல்கிறார் Keung. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில், அது 700,000 முறைகளுக்கு மேல் பார்வையிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here