மாவை கிடுக்குப்பிடி: தமிழ் அரசு கட்சி பேஸ்புக் அக்கப்போர் ஓய்ந்தது!


இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரமுகர்களை பற்றி பேஸ்புக்கில் விமர்சனம் செய்த, கட்சியின் வாலிபர் முன்னணி உறுப்பினர்கள் நால்வரிற்கு கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் எழுத்துமூலமும், கடிதம் மூலமும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் அதிகமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தொடர்பாக பேஸ்புக்கில் அவதூறு பரப்பினார்கள்.

குறிப்பாக, முன்னாள் எம்.பி சரவணபவனின் அணியை சேர்ந்தவர்களும் இதில் உள்ளடங்குகின்றனர். தம்மால் விடுக்கப்படும் கடைசி எச்சரிக்கையென மாவை சேனாதிராசா அவர்களை எச்சரித்துள்ளார்.

பேஸ்புக்கில் இடம்பெறும் சொந்த கட்சி சண்டைக்கு எதிராக மாவை சேனாதிராசா அண்மை நாட்களில் எடுத்த நடவடிக்கைகளால், பேஸ்புக்கில் அண்மைக்காலமாக நடந்த அக்கப்போர் ஓய்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here