450- 1001 cc மோட்டார் சைக்கிள்களை கூடுதல் கட்டணத்துடன் பதிவு செய்ய யோசனை!

450 – 1001 சிசி மோட்டார் சைக்கிள்களை மேலதிக கட்டணம் வசூலித்து, பதிவு செய்ய போக்குவரத்து அமைச்சர், அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்துள்ளார். பாதுகாப்பு, நிதியமைச்சின் பரிந்துரையுடன் இதனை நடைமுறைப்படுத்தலாமென பரிந்துரைத்துள்ளார்.

இலங்கையில் மோட்டார் சைக்கிள்களின் எஞ்சின் திறன் 1000 சி.சி.க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று 2014 ஆம் ஆண்டில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

வர்த்தமானி அறிவிப்பு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவிருந்தாலும், பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால் அதை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியவில்லை.

இதற்கிடையில், 450 சி.சி.க்கு மேல் எஞ்சின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களின் பதிவை இடைநிறுத்த 2016 ஆம் ஆண்டு அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 450 முதல் 1000 பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்களை கூடுதல் கட்டணம் வசூலித்து பதிவு செய்ய அனுமதிக்குமாறு அமைச்சர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here