நாம் பிளவுபட்டு நிற்பது தென்னிலங்கை அரசுக் கு வாய்ப்பாகிவிடும்: சித்தார்த்தன் எச்சரிக்கை

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ ஒரு சிறந்த சிங்கள தேசியவாதி. அவா் இனப்பிரச்சினைக்கு நியாயமான தீா்வினை வழங்குவாா் என நான் நினைக்கவில்லை. என கூறியிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரும், புளொட் அமைப்பின் தலைவருமான த.சித்தாா்த்தன், அவா் தரமாட்டாா் என்பதற்காக நாங்கள் அமைதியாக இருக்க முடியாது எனவும் கூறியுள்ளாா்.

சமகால அரசியல் நிலமைகள் தொடா்பாக யாழ்.ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பின்போது, ஜனாதிபதி கோ ட்டபாயவுடன் தீா்வு கூறித்து பேச கூட்டமைப்பு எடுத்துள்ள முயற்சிகள் தொடா்பாகவும், அதனால் பயனுண்டா எனவும் ஊடகவியலாளா்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா்.

இது குறித்து மேலும் அவா் கூறுகையில்,

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை எனக்கு தொியும். அவா் ஒரு சிறந்த சிங்கள தேசியவாதி,அவா் இனப்பிரச்சனைக்கு நியாயமான தீா்வினை வழங்குவாா் என நான் நினைக்கவில்லை. ஆனால் அதற்காக நாங்கள் அமைதியாக இருக் க முடியாது. சா்வதேச மட்டத்திலும் உள்ளுாிலும் பேசவேண்டும். அழுத்தங்களை கொடுக்கவேண்டும்.

இல்லாவிட்டால் பிரச்சினையே இல்லை என்றாகிவிடும். கடந்த 70 வருடங்களாக அகிம்சை வழியிலும், ஆயுதங்களாலும் எமது பக்க நியாயங் களை பேசி எமக்கானதை கேட்டதாலேயே அது இன்றும் உயிா்ப்புடன் இருக்கிறது. எனவே பேசவேண்டியது கட்டாயம். அது கோட்டபாயவாக இருந்தால் என்ன மற்றவா்களாக இருந்தால் என்ன நாம் பேசுவோம்.

அரசுடனான கூட்டமைப்பின் பேச்சுவாா்த்தைகளில் 3ம் தரப்பின் மத்தியஸ்த்தம் தொடா்பாக ஊடகவியலாளா்ள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில்,

3ம் தரப்பின் மத்தியஸ்த்தம் 1987ல் இந்திய இலங்கை ஒப்பந்தம் உருவாக்கப்பட்டபோது இருந்தது. 13ம் திருத்தச்சட்டத்தில் உள்ளதை காட்டிலு ம் பல விடயங்களை எமக்கு தருவதாக இந்தியாவுக்கு கூறிய ஜே.ஆா் பின்னா் அதனை செய்யவில்லை. எனக்கு நியாயமான ஒரு பயம் உள்ளது குறிப்பாக விமல் வீரவங்ச மற்றும் உதயகம்மன்பில போன்றவா்களுடன் பேசும்போது

அதாவது அவா்களுக்கு 3இல் 2 பெரும்பான்மை கிடைத்தால் அவா்கள் 19ம் திருத்தச்சட்டத்தை மட்டுமல்ல 13ம் திருத்த சட்டத்தையும் இல்லாமல் செய்யலாம் என நினைக்கிறாா்கள். ஆனால் 13ம் திருத்தச்சட்டத்தில் கைவைத்தால் இந்தியா தலையிடும் என்ற பயம் அவா்களுக்குள்ளது. ஜனாதிபதி இந்தியா சென்றபோது கூட தமிழா்களுக்கு தீா்வினை வழங்குங்கள் என சொல்லப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வெளியேவந்து சொன்ன கதை வேறாக இருந்தாலும் இந்தியா சொல்லியுள்ளது. அழுத்தம் உள்ளது என்பது ஜனாதிபதிக்கு தொியும். எனவே நாம் கூறுபட்டால் எந்த நாடும் எமது விடயத்தில் மத்தியஸ்த்தம் வகிக்க விரும்பாது. அதேபோல் நாம் கூறுபட்டு நிற்பது அரசுக்கும் லாபம். 1994ம் ஆண்டு நாங்கள் பாராளுமன்றில் உள்ளபோது அரசியலமைப்பு விடயத்தில் ஒற்றுமையாக இருந்தாலும்,

வேறு விடங்களில் நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை சொல்ல இறுதியில் ஒருவருடைய கதையும் கணக்கில் எடுக்கப்படாத நிலை இருந்தது.

இராணுவ மயமாக்கல் விடயத்தில் இந்தியாவின் கவனத்திற்கு கொண்டு செல்வது தொடா்பாக ஊடகவியலாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது,

இந்தியா ஒன்றே அக்கறை காட்டக்கூடிய நாடு. ஆனால் இவ்வாறான விடயங்களில் இந்தியா அக்கறை காட்டுவதும், தலையீடு செய்வதும் இந்த ஆட்சியில் தலையீடு செய்வதாக அமையும். ஆகவே அதனை அவா்கள் செய்ய மாட்டாா்கள். ஆனால் 13ம் திருத்தச்சட்டத்தை நீக்குவது போன்ற விடயங்கள் நடந்தால் இந்தியா நேரடியாக தலையிடும்.

எனவே இந்தியா இராணுவ மயமாக்கல் போன்ற விடயங்களில் தலையிட்டால் அது இந்த நாட்டின் இறையாண்மையில் தலையிடுவதாக அமையும் அதனை இந்தியா செய்யாது. மேலும் கடந்த ஆட்சியில் நாங்கள் இந்தியா சென்று பேசவில்லை. ஆனால் இங்கு பேசி கொண்டிருந்தோம். மேலும் அந்த நேரம் இந்தியாவிடம் சென்று பேசவேண்டிய விடயங்களும் இருக்கவில்லை.

அப்படி பேசினாலும் அது இங்கு நடக்கும் விடயங்களை பாதிக்கும் என்பதேயாகும். காரணம் சிங்கள தலைவா்களுடைய மனோநிலை அவ்வாறுதான் இருந்தது. குறிப்பாக ஐக்கியதேசிய கட்சியில் உள்ள சிரேஸ்ட அமைச்சா்கள் கூட அப்படியிருந்தனா். நான் ஒருமுறை உப குழு கூட்டம் முடிந்து வந்தபோது என்னை கண்ட ஐ.தே.கட்சியில் உள்ள சிரேஸ்ட அமைச்சா் ஒருவா்

சிங்களத்தில் கூறினாா் வேலை இல்லாத வேலை பாா்கிறீா்கள் என்று. அதுதான் அவா்களுடைய மனோநிலை. இதற்குள் இந்தியாவிடமும் முறையிட்டால் அது நடந்த முயற்சிகளை பாதித்திருக்கும். ஆனால் இந்தியா அரசை சந்திக்கும்போதெல்லாம் தங்களால் ஆன அழுத்தங்களை கொடுத்துக்கொண்டே இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here