சிறையிலிருந்து விடுதலையான 16ஆம் நாள லண்டன் கத்திக்குத்தில் ஈடுபட்டார்!

பிரிட்டனில் பூங்காவில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த பொதுமக்களை குறிவைத்து இளைஞர் ஒருவர் நடத்திய கத்திகுத்து தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.

தென்கிழக்கில் உள்ள ரீடிங் நகரில் போர்பரி என்ற பூங்கா உள்ளது. சனிக்கிழமை மாலை இந்த பூங்காவில் வழக்கம் போல் மக்கள் கூடியிருந்தனர். அப்போது, கூட்டத்துக்குள் புகுந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் திடீரென சத்தமிட்டு, தான் வைத்திருந்த கத்தியால் கண்ணில் தென்பட்ட மக்கள் மீது குத்தத் தொடங்கினார்.

இதனால் பூங்காவில் பெரும் பதற்றம் உருவானது. மக்கள் அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர்.

கத்திக்குத்திற்க இலக்கான பலர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். இதற்கிடையே இந்த இளைஞரின் வெறிச் செயல் குறித்து அங்கிருந்த மக்கள் பொலிசாருக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற பொலிசார் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய வாலிபரை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

இந்த கொடூர தாக்குதலில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். கத்திக்குத்தில் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த பலரை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

“இந்தத் தாக்குதலில் ஒரு இளைஞரை தவிர வேறு யாருக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. சம்பந்தப்பட்டவர் லிபியா நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது என கூறினார்.

தற்போது இந்த இளைஞர் குறித்து மேலதிக தகவல்கள் தெரியவந்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

அவரது பெயர் கைரி சதல்லா (25) 16 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து விடுதலையானார், விடுதலையாவதற்கு முன்னர் மனஉளைச்சல் மற்றும் உளவியல் ரீதியான பிரச்சினைக்களுக்காக சிகிச்சை பெற்று உள்ளார். மேலும் 2018 ஆம் ஆண்டில் வன்முறை நிகழ்த்தியதாக குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும் அவருக்கு ஐந்து ஆண்டுகள் இங்கிலாந்தில் வசிக்க அனுமதி வழங்கப்பட்டது.

சிரியாவுக்கு செல்ல வேண்டும் என்ற இவரது ஆர்வம் காரணமாக கடந்த ஆண்டு சில மாதங்கள் இங்கிலாந்தின் உளவு அமைப்பின் கண்காணிப்பு வட்டத்தில் இருந்துள்ளார். வன்முறைக்கான குற்றச்சாட்டுகளும் உளவியல் பிரச்சினையும் உள்ள ஒரு இளைஞரை இங்கிலாந்து ஏன் மேலும் 5 ஆண்டுகள் தங்கிக் கொள்ள அனுமதித்தது என்ற கேள்வி தற்போது முன்வைக்கப்படுகிறது.

எனினும்,இவர் திவிரவாத சித்தாந்தங்களில் ஈடுபாட்டுடன் இருக்கவில்லை. உளவியல் பிரச்சனையே இதன் மூல காரணம் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

ஆனால் லிபியாவில் பயங்ரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், சதல்லா அங்கிருந்து தப்பித்துக்கொள்ள இங்கிலாந்து வந்ததாகவும், அவர் கிறிஸ்தவ மதத்தை தழுவியதாகவும் உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here