வெடிமருந்து திருட்டு விவகாரத்தில் இருவர் கைது… த.தே.ம.முன்னணி பிரதேசசபை உறுப்பினரின் கணவனும் கைது!

முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் வெடிபொருட்களை திருட முற்பட்ட சந்தேகத்தில் இரண்டு பேர் இன்று பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரியாலை, எழுதுமட்டுவாள் பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹலோ ட்ரஸ்ட் கண்ணிவெடியகற்றும் நிறுவனத்தினால் கண்ணிவெடி அகற்றப்படும் பகுதியில் இவர்கள் வெடி மருந்த திருட முற்பட்டனர். அகற்றப்பட்ட வெடிபொருட்களில் இருந்த வெடிமருந்துகள் பிரிக்கப்பட்டு பொதிசெய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த பொதிகளில் ஒன்றையே அவர்கள் திருட முற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அ்த பொதியில் 4.5 கிலோகிராம் ரிஎன்ரி வெடிமருந்து இருந்துள்ளது.

கைதானவர்கள் கண்ணிவெடி அகற்றும் பணியில் முன்னர் ஈடுபட்டிருந்ததால், கணிவெடி அகற்றும் பகுதிக்குள் குறியீடுகளை அவதானித்து நுழைந்து, வெடிமருந்த திருட்டில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது.

அவர்கள் வெடிமருந்தை மீனவர்களிற்கு விற்பனை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அப்படி, வியாபார நோக்கத்தில் வெடிமருந்தை திருட முற்பட்டபோது, கண்ணிவெடி அகற்றும் நிறுவன பணியாளர்களால் அவதானிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் பற்றிய தகவல் பொலிசார், இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டதையடுத்து, நேற்று இரவும், இன்று காலையிலுமாக இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் ஒருவரின் மனைவி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதியென்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here