யாழ் மாநகரசபைக்குட்பட்ட பாடசாலைகளில் தொற்று நீக்க தயார்: பதில் முதல்வர்!

கொவிட் 19 வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்துப் பாடசாலைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டமை யாவரும் அறிந்ததே. குறித்த பாடசாலைகள் அனைத்தும் இம்மாத இறுதியில் மீள ஆரம்பிக்கப்படயிருப்பதாக அரசு அறிவித்துள்ளது. இந் நிலையில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் பாடசாலைகள் சிரமதானம் செய்யப்பட்டு தொற்று நீக்கம் செய்ய் வேண்டியுள்ளது.

எனவே யாழ் மாநகரசபை நிர்வாகப் பரப்பினுள் அமையப்பெற்றுள்ள பாடசாலைகளில் தொற்று நீக்கல் நடவடிக்கைகளை மேற்கொள்ள யாழ் மாநகரசபை தயாராக உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

எனவே பாடசாலை அதிபர்கள் தமது கோரிக்கைகளை மாநகர முதல்வருக்கு எழுத்து மூலமாக எதிர்வரும் 2020.06.25ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியும்.

தமது பாடசாலைகளுக்கு தொற்று நீக்கல் மேற்கொள்ள வேண்டுமாயின் விண்ணப்பிக்கின்ற ஒவ்வொரு பாடசாலைகளும் 25.06.2020 ஆம் திகதி முன்னர் தமது பாடசாலைகளை சிரமதானம் செய்து வைத்திருக்க வேண்டியது மிக முக்கியமான விடயமாகும். சிரமதானம் செய்யப்படாத பாடசாலைகளுக்கு கிருமித் தொற்று நீக்கல் மேற்கொள்வது சிரமமாகும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே உரிய முடிவுத் திகதிக்கு முன்னர் கிருமித் தொற்று நீக்கலுக்காக விண்ணப்பிக்கின்ற பாடசாலைகளின் விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்படுகின்ற கால ஒழுங்கில் பதிவு செய்யப்பட்டு தொற்று நீக்கல் மேற்கொள்ளப்படும் என்பது விசேட அம்சமாகும்.

மேலதிக விபரங்களுக்கு யாழ் மாநகர முதல்வர் அலுவலகம் மற்றும் மாநகர பதில் முதல்வரை தொடர்பு கொள்ள முடியும் என்பதையும் அறியத்தருகின்றோம்.

து.ஈசன்
பதில் முதல்வர்
மாநகரசபை
யாழ்ப்பாணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here