நயினாதீவுக்குள் காலணியுடன் நுழைந்த பொலிசார்: வடக்கு பொலிஸ் அத்தியட்சகரிடம் விளக்கம் கோரிய பிரதமர்!

நயினாதீவுநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்குள் பாதகாப்பு தரப்பினர் நேற்று சப்பாத்துடன் நுழைந்த விவகாரம், தவறுதலாக இடம்பெற்றதாக பொலிஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் சர்ச்சையானதையடுத்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, வடக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரை தொலைபேசியில் அழைத்து விளக்கம் கேட்டுள்ளார்.

இதன்போது, கடமையிலிருந்த அதிகாரிகள் சிலர் தவறுதலாக அப்படி நடந்து கொண்டதாகவும், வேண்டுமென்றே அப்படி நடந்து கொள்ளவில்லையென சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விளக்கமளித்துள்ளார்.

வணக்க தலங்களில் கடமையிலீடுபடும் பாதுகாப்பு தரப்பினர், அதன் புனித தன்மையை உணர்ந்து செயற்பட வேண்டுமென பிரதமர் அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here