பிரேஸில் உயிரிழப்பு 50,000 ஐ கடந்தது!

பிரேசிலில் கொரோனாவு பாதிப்பினால் நேற்று 640 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து பிரேசிலில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 50,617 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் பிரேசிலில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 17,400 பேருக்கு
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிரேசிலில் கொரோனாவால் இதுவரை 10,85,038 பேர்வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவுக்கு அடுத்து கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கையில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

கொரோனாவைக் கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிவிப்புகளை பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனோரா அலட்சியம் காட்டி வந்தார். மேலும் பிரேசிலில் மொத்தம் உள்ள 27 மாநிலங்களில், 24 மாநிலங்கள் மட்டுமே தனிமனித இடைவெளியை அமல்படுத்தின. ஆனால், மாநிலங்களின் இத்தகைய நடவடிக்கைகள் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்றே பிரேசில் ஜனாதிபதி பேசி வந்தார்.

கொரோனா விவகாரத்தை பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சினோரா சரியாக கையாளவில்லை என்று சர்வதேச அளவில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானார்.

உலக சுகாதார அமைப்பின் இந்தக் குற்றச்சாட்டை பிரேசில் மறுத்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகள் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபடாமல் திணறி வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. இந்த நிலையில் கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் சவாலாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here