என்னை மட்டுமல்ல, சஜித்தையும் விசாரணைக்கு கூப்பிடுங்கள்: கருணா!

என்னை மட்டுமல்ல சஜித் பிரேமதாசவையும் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்க வேண்டுமென விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

ஆனையிறவில் ஒரே இரவில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை கொன்றேன் என கருணா தெரிவித்த கருத்து தொடர்பாக தென்னிலங்கையில் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிலையில், இது குறித்து விசாரணை நடத்த சிஐடியினருக்கு பதில் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

விரைவில் அவர் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று சில கருத்துக்களை தெரிவித்தார்.

“கடந்த காலத்தில் இடம்பெற்ற கொடிய யுத்தத்தில் இரு தரப்பிலும் பலர் கொல்லப்பட்டனர். அந்த காலம் வரக்கூாதென்ற அடிப்படையிலேயே பேசினேன். ஆனால், சஜித் பிரேமதாசா தரப்பினர் தேவையில்லாமல் இதை பெரிதாக்குகிறார்கள். எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன்.

என்னை மட்டுமல்ல சஜித் பிரேமதாசாவையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும். இந்தியாவுடனான யுத்தத்தின் பின் புலிகள் அழியும் நிலையிலிருந்தபோது, பிரேமதாசாதான் துப்பாக்கிகளும், ஒரு கோடி ரவைகளும் வழங்கி, புலிகளிற்கு உயிர்கொடுத்தார். ஐ.தே.கவினரும் விசாரிக்கப்பட வேண்டும்.

அநுரகுமார திசாநாயக்கவும் விமர்சித்திருந்தார். அவருக்கு என்னை விமர்சிக்க தகுதியில்லை. சொந்த மக்களில் 80,000 பேரை அவரது கட்சி கொன்றது என்றார்.்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here