தந்தையை வெட்டிக் கொன்றவர் பிணையில் வந்த தாயை குத்திக் கொன்றார்!

மஹியங்கணை பகுதியில் 62 வயதான பெண்ணொருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

6 பிள்ளைகளின் தாயான ஈ.எம்.குணவதியென்பவரே இன்று கொல்லப்பட்டார். அவரது மகனே இந்த கொலையை செய்தார்.

தாயை கொலை செய்தவர், தனது சகோதரன் மீதும் தாக்குதல் நடத்தியிருந்தார். அவர் உயிராபத்தான நிலையில் மஹியங்கணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

4 வருடங்களின் முன்னர் தனது தந்தையை இவர் வெட்டிக் கொன்றிருந்தார். நீண்டகாலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டவர், கடந்த வருடமே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here