ஜனாதிபதி தேர்தலில் சஜித்தின் தோல்விக்கு பேராயர்தான் காரணம்!

கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் ஒரு பக்கச்சார்பான நிலைப்பாட்டினால் கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசா தோல்வியடைய நேர்ந்ததாக, ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலை அடிப்படையாக கொண்டு, ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னதாக ஆண்டகையின் அறிக்கைகள், நடவடிக்கைகள் கோட்டாபயவை ஆதரிக்கும் விதமாக உள்ளதாக அப்பொழுதே பல தரப்பினாலும் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில், ஹரீன் தற்போது வெளிப்படையாக குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐ.தே.கவிற்கு பாரம்பரியமான வாக்களிக்கும் 5 வீதமான கிறிஸ்தவ வாக்குகள் கோட்டாபயவிற்கு சென்றதாகவும், இதுவே தோல்விக்கு காரணமென்றும் தெரிவித்துள்ளார்.

அந்த 5 வீத வாக்குகள் சஜித்திற்கு கிடைத்திருந்தால் இரண்டு வேட்பாளர்களும் 47 வீத வாக்கை பெற்றிருப்பார்கள் என்றும், இதன்மூலம் இரண்டாம் சுற்று வாக்கெண்ணும் நிலைமை ஏற்பட்டிருக்குமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது அதிருப்தியை தொலைபேசி வழியாக மல்கம் ரஞ்சித்திற்கு தெரிவித்ததாகவும், ஹரீன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here