நீரில் மூழ்கி உயிரிழந்த 4 பேரும் குளிப்பதற்கு முன் ஒன்றாக செல்பி எடுத்தனர்!

வத்தளை திக்கொவிட்ட கடலில் நீராட சென்ற இரண்டு மாணவர்கள் உள்ளிட்ட நால்வர் நேற்று முன்தினம் (20) மாலை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு முழ்கிய மேலும் இருவர் காப்பாற்றப்பட்டதுடன் அவர்களில் ஒரு யுவதி ராகம போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

திக்கொவிட்ட மயானத்திற்கு அருகில் உள்ள கடலில் நீராடுவதற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த எழுவர் நேற்று (20) பிற்பகல் 2.30 அளவில் அங்கு சென்றுள்ளனர்.

அவர்களில் சிலர் நீராடிய போது கடலில் உருவாகிய சுழியில் அகப்பட்டு முழ்குவதை கரையில் இருந்த உறவினர்கள் அவதானித்துள்ளனர்.

அந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் நீரில் முழ்குவதை அவதானித்த இளைஞன் ஒருவன் இருவரை மீட்டுள்ளார்.

எனினும் அந்த இளைஞனும் சுழியில் சிக்கி நீருக்குள் காணமல் போயுள்ளார்.

இதனை அடுத்து சம்பவம் தொடர்பில் அறிந்த வத்தளை பொலிஸார் மற்றும் கடற்படை அதிகாரிகள் பொது மக்களின் உதவியுடன் நீரில் முழ்கிய ஒருவரை மீட்டுள்ளனர்.

நீரில் முழ்கிய ஐவர் மீட்கப்பட்டு ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர்களில் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டனர்.

இந்த அனர்த்தத்தை எதிர்கொள்ள முன்னர் குறித்த ஐவரும் ஒன்றாய் இருந்து ´செல்பி´ புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 30 வயதான சஞ்ஜிவ பிரியதர்சன என்ற இளைஞன் பதுளை ஹாலி – எல பகுதியில் வசிப்பவர் எனவும் தொழிலுக்காக வத்தளை பகுதிக்கு சென்றவர் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

உயிரிழந்த 19 வயதான சவானி சுலக்சனா உஸ்வெட்டிகஸ்யாவ பகுதியை சேர்ந்தவர் எனவும் அவரின் சகோதரியும் கடற்கரைக்கு சென்றிருந்த போதும் அவர் நீராடவில்லை.

மேலும் உஸ்வெட்டிகஸ்யாவ பகுதியை சேர்ந்த 16 வயதான தருசா பெர்னாண்டோ என்பவர் உயிரிழந்துள்ளதுடன், ராகம போதனா வைத்தியசாலையின் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர் 24 வயதான தருசாவின் சகோதரியாவார்.

கந்தானையில் வசிக்கும் 14 வயதான சஜித் சந்தருவான் என்ற சிறுவனும் உயிரிழந்துள்ளதுடன், அவரின் தாயார் வெளிநாடு ஒன்றில் பணி புரிபவர் என கண்டறியப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here