மன்னாரில் தியாகிகள் தினம்!

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) கட்சியின் ஸ்தாபக தலைவர் தோழர் கே.பத்மநாபா மற்றும் போராளிகள்,பொது மக்களின் 30 ஆம் ஆண்டு நினைவு தினமான தியாகிகள் தினம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) மாலை 5 மணியளவில் மன்னாரில் நினைவு கூறப்பட்டுள்ளது.

மன்னாரில் உள்ள ஈ. பி. ஆர். எல். எப். அமைப்பின் மாவட்ட அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் தலைமையில் இடம் பெற்றது.

குறித்த தியாகிகள் தின நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண முன்னாள் அமைச்சர் ஞானசீலன் குணசீலன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், உள்ளுராட்சி மன்ற பிரதி திநிகள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதன் போது உயிர் நீத்த ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் ஸ்தாபக தலைவர் தோழர் கே. பத்மநாபா மற்றும் போராளிகள், பொது மக்கள் ஆகியோரை நினைவு கூர்ந்து தோழர் பத்மநாபாவின் படத்திற்கு மாலை அணிவித்து சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து நினைவு உரையும் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here