நடந்தது மனிதக்கொலை; மணல் ஏற்றினாலும் சுட்டுக்கொல்ல அதிகாரம் கிடையாது: சீறுகிறார் சிறிகாந்தா!

மணல் ஏற்றும் இளைஞர் ஒருவர் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த கொலை குறித்து நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.

இன்று (21) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நேற்று சனிக்கிழமை மாலை கிளாலியில் ராணுவ சிப்பாய் ஒருவரால் செய்யப்பட்ட துப்பாக்கி பிரயோகத்திற்கு இரையான இளைஞரின் மரணம் மனிதக் கொலை என்பதில் சத்தேகத்திற்கு இடமில்லை.

சட்டவிரோதமாக மண் ஏற்றிச் செல்ல முயன்ற சம்பவத்துடன் தொடர்புபட்டிருத்தார் என்ற சந்தேகத்தில் எவர் மீதும் துப்பாக்கி பிரயோகம் செய்வதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது.

மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த குறித்த இளைஞர் ராணுவ சிப்பாய்களால் வழிமறிக்கப்பட்ட போது தப்பிச் செல்ல முயற்சிக்கையில் துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்த இளைஞரை துரத்திச் சென்று கைது செய்ய முயற்சி எதுவும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

சம்பந்தப்பட்ட ராணுவச் சிப்பாய்க்கு அவரால் ஆபத்து ஏதும் ஏற்படக் கூடிய சூழ்நிலையும் இருந்திருக்கவில்லை.

இந்நிலையில் துப்பாக்கி பிரயோகம் தேவையற்றது. கண்மூடித்தனமாக அது நடாத்தப்பட்டிருக்கின்றது.

இதே வேளையில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற போது சுடப்பட்டவரின் உடல் அங்கே கைப்பற்றப்பட்டிருத்த உழவு இயந்திரத்துக்கு எப்படி வந்தது என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றது.

சம்பவத்தை திசை திருப்பி, உண்மையை மறைப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டிருக்கின்றது என்பது தெரிகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் பாரபட்சம் அற்றதும், முழுமையானதுமான புலன் விசாரணையை பொலீஸ் தரப்பு முன்னெடுத்து, சகல சாட்சியத்தையும் ஆதாரங்களையும் நீதிமன்றில் சமரப்;பிக்க வேண்டும் என்று நாம் கோருகின்றோம்.

வட மாகாண பிரதிப் பொலீஸ் மாஅதிபர் உரிய நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நாம் வேண்டிக்கொள்கின்றோம்.

படை வீரர்களின் கைகளில் உள்ள துப்பாக்கிகள் எந்தச் சூழ்நிலையிலும் துஸ்பிரயோகம் செய்யப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் விதத்தில், திட்டவட்டமான கட்டளைகளை பாதுகாப்பு அமைச்சு படைத்தரப்புகளுக்கு வழங்க முன்வர வேண்டும் என்றும் நாம் இச் சந்தர்ப்பத்தில் கோருகின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here