கவர்ச்சியால் கால்ஷீட் வாங்கிய தர்ஷா!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பிரபலமான நடிகைகள் பிரியா பவானி சங்கர், வாணிபோஜன் வரிசையில் தற்போது தர்ஷா இணைந்துள்ளார்.

மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட தர்ஷா தற்போது சென்னையில் வசித்து வருகிறார். விஜய் டிவியின் பிரபல சீரியலான செந்தூரப்பூவேயில் வில்லியாக டித்து வருகிறார். முள்ளும் மலரும் சீரியலிலும் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்து வருகிறார்.

லாக் டவுன் சமயத்தில் விடாமல் அடாவடியாக கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து பட வாய்ப்புகளை தேடியுள்ளார். அதற்கு பலன் கிடைத்துள்ளதாம்.

தற்போது ஒரு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாம் ரெமோ சினிமாஸ் தயாரிப்பில் அடுத்து எடுக்கும் படத்தில் இவர் கதாநாயகியாக நடிப்பதாகவும் பிரபல நடிகர் கதாநாயகனாக நடிக்க போவதாகவும் அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதனால் தற்போது தலைகால் புரியாமல் ஆடுகிறாராம். நடிப்பை விட கவர்ச்சிக்கு மவுசு இருக்கிறது என்பது உறுதி ஆகிவிட்டது. இதனால் தொடர்ந்து கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here