கள்ளுத்தவறணை வேண்டாம்: அல்வாய் மக்கள் எதிர்ப்பு!

அல்வாய் கிழக்கு கலட்டி பகுதியில் கரவெட்டி பனை தென்னை வள அபிவிருத்தி சங்கம் கள்ளுத்தவறனை அமைக்கும் முயற்சிக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்புக்களை தெரிவித்து வருகின்றார்கள். இதனை மீறியும் கள்ளுத்தவறணை அமைக்க முயற்சி செய்தல் போராட்டம் செய்யவும் மக்கள் முடிவு செய்துள்ளனர்.

அல்வாய் கிழக்கு கலட்டி பகுதியில் 15 வருடங்களுக்கு முன்னர் கள்ளுத்தவறணை இயங்கி வந்தது. இதனால் அப்பகுதியில் கடந்த காலங்களில் பல வன்செயல்கள் இடம்பெற்றமையினாலும் அமைதியின்மை தொடர்ந்தமையினாலும் கள்ளுத்தவறணை அல்வாய் ஒடைப் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

அல்வாய் பிரதன வீதியில் அமைத்தமையினாலும் அத்துடன் அந்த இடத்தில் வீடுகள் ஆலயம் உள்ளமையினால் அந்த சூழல் கள்ளுத்தவறனைக்கு ஏற்ற இடம் இல்லை என்று நீண்டகாலமாக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வைத்தனார். அத்துடன் காணி உரிமையாளரும் கள்ளுத்தவறணையை அகற்றி காணியை தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரியுள்ளார் .

இந்தநிலையில் மீண்டும் பழைய இடமான கலட்டி பகுதிக்கு கரவெட்டி பிரதேச பனை தென்னை வள அபிவிருத்தி சங்கம் மாற்ற முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது. இதற்கு அப்பகுதி மக்கள் தமது எதிர்ப்புக்களை தெரிவித்துவருகின்றார்கள். தற்போது அதிகமான குடிமைகள் அவ்விடத்தை சுற்றி இருப்பதினால் அதிகமான சிறுவர்களும் அப்பகுதியில் உள்ளனர். அவர்களின் குடிப்பழக்கத்தை அதிகரிக்க இது வாய்ப்பாக அமையும் என்றும், வன்செயல்கள் அமைதியின்மை ஏற்பாட அதிக வாய்புக்கள் இருக்கும் என்றும் எந்த பகுதி மக்கள் தெரிவித்து வருகினறார்கள்.

இதற்கு கரவெட்டி பிரதேச செயலகம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளுத்வறணை அமைக்க பொருத்தமான இடங்கள் உள்ள போதும் மக்கள் அதிகம் வாழும் இடங்களை தெரிவு செய்தமைக்கு அப்பகுதி மக்கள் எதிர்பு தெரிவித்து வருகின்றார்கள். எனவே உரிய தரப்பினார் மீள் ஆய்வு செய்து வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here