தமிழ்த் தேசியக்கூட்டமைப்பே தமிழ் மக்களின் சிறந்த தலைமைத்துவம் என்பதில் எவ்வித மாற்றுக்ருத்திற்கும் இடமில்லை

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பே தமிழ் மக்களின் சிறந்த தலைமைத்துவம் என்பதில் எவ்வித மாற்றுக்ருத்திற்கும் இடமில்லையென மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர். ம.இளங்கோ அவர்கள் தெரிவித்தார்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் பிரச்சினைகளை சர்வசம் வரை கொண்டு சென்று சர்வதேச மயப்படுத்தியுள்ளது. இதன் தொடர் நடவடிக்கையை மேற் கொண்டு இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களாகிய நாங்கள் நிரந்தாத் தீர்வினை பெற்று நிம்மதியாக வாழவேண்டுமாக இருந்தால் நாங்கள் இம்முறை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை வெற்றி பெற செய்ய வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தளவில் இம்முறை ஒட்டு மொத்தமாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கு ஆதரவளித்தால் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளலாம். மூன்று ஆசனங்களை பெறுவதென்பது உறிதியாகும்.

சிலரின் விமர்சனங்கள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அபிவிருத்தி செய்யவில்லை என்ற கருத்தினையே முன்வைத்து வருகின்றனர். இதுவொரு பொய்யான விடயமாகும் கடந்தகாலங்களை விட கடந்ந அரசின் ஊடக பலதரப்பட்ட அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டன. எமது உரிமைசார்ந்த விடயங்களிலும் முன்னெடுப்பதில் முன்னேற்றம் அடைந்திருந்தது. இதனை எவரும் மறுக்க முடியாது.

எமது தமிழ் மக்கள் கடந்த காலங்களில் வாக்களிப்பு வீதம் குறைவாகவுள்ளதானை அவதானிக்க முடிகின்றது இந்நிலை மாறி அனைவரும் ஒற்றுமையாக வாக்களிக்க வேண்டுமென கேட்டுக் கொள்வதாக இதன்போது தெரிவித்தார்.

-பழுகாமம் நிருபர்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here