கடற்படையினர் மத்தியில் பரவிய கொரோனா 99% கட்டுப்பாட்டில்!

கடற்படையினருக்குள் பரவிய கொரோனா வைரஸ் தாக்கம் 99%  கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், சுமார் 1000 கடற்படை வீரர்கள் இன்னும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் இரண்டு கடற்படை வீரர்கள் இன்று மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். அதன்படி, இதுவரை 773 கடற்படை வீரர்கள் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டில் நேற்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட யாரும் அடையாளம் காணப்படவில்லை. 65 நாட்களின் பின்னர் இலங்கையில் தொற்று அடையாளம் காணப்படாத நாள் நேற்றாகும்.

1950 பேர் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது, 467 நோயாளிகள் மட்டுமே இன்னும் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட 1472 பேர் முழுமையாக குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here