சூம் செயலியில் திருமண நிகழ்வை நடத்திய இலங்கை ஜோடி!

இலங்கையை சேர்ந்த ஜோடியொன்று சூம் அப் மூலம் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

டுபாயில் பணியாற்றும் காதலர்களான இருவரும் தமது திருமணத்தை கொழும்பில் நடத்த திட்டமிட்டிருந்தனர். எனினும், கொரோனா கட்டுப்பாடு காரணமாக அவர்களால் கொழும்பிற்கு வர முடியாத நிலையில், மணமக்கள் டுபாயில் சடங்குகளை நடத்தி இல்லறத்தில் நுழைந்தனர்.

சூம் அப் வழியாக மணமக்களின் பெற்றோரும் திருமணத்தில் இணைந்திருந்தனர்.

கஜன்- நாடியா ஜோடி கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர் பௌத்த, கிறிஸ்தவ மதங்களை சேர்ந்த அவர்களின் காதலுக்கு ஆரம்பத்தில் பெற்றோர் எதிர்த்தாலும், பின்னர் சம்மதம் தெரிவித்தனர்.

கடந்த 10ஆம் திகதி கொழும்பிலுள்ள ஹொட்டல் ஒன்றில் அவர்களின் திருணம் ஏற்பாடாகியிருந்தது. திருமண நாளில் மண்டபம் தயாரான போதும், ஜோடியால் டுபாயிலிருந்த வர முடியவில்லை.

அதேநாளில் சூம் செயலியின் வழியாக இரு குடும்பமும் ஒன்றிணைய, கஜன்- நாடியா தம்பதி பாரம்பரிய முறைப்படி இல்லறத்தில் இணைந்தனர்.

திருமண நாளில் கஜனின் குடியிருப்பில் மணப்பெண் குடிபுகுந்தார்.

திருமணத்தில் அவர்களின் நெருங்கிய நண்பர்கள் சிலரும் கலந்து கொண்டனர். இலங்கைக்கு விமான சேவை ஆரம்பிக்கும் நாளை எதிர்பார்த்துள்ளதாக தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here