மன்னாரில் மத தீவிரவாதிகள் மீண்டும் வெறியாட்டம்: இந்து ஆலயம் உடைப்பு (PHOTOS)

மன்னார்-யாழ் பிரதான வீதி, தள்ளாடி விமான ஓடுபாதை அருகில் காணப்பட்ட இந்துக்களின் சிற்றாலயம் இனம் தெரியாத நபர்களால் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.

குறித்த சிற்றாலயத்தில் காணப்பட்ட இந்துக் கடவுள்களின் புகைப்படங்கள் ஆலயத்தின் வாசல் பகுதியில் உடைக்கப்பட்டுள்ளதுடன் சில படங்கள் அருகில் உள்ள பற்றைகாடுகளுக்குள் வீசப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டது.

அதே நேரத்தில் சிற்றாலயத்தின் வெளிப்பகுதியில் காணப்பட்ட பிள்ளையார் சிலையானது குப்பைகள் மற்றும் மரத்துண்டுகளினால் மூடப்பட்டு நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிற்றாலயமானது தொடர்சியாக இனம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த விடையம் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here