பிரிட்டன் பூங்காவிற்குள் இளைஞன் வெறியாட்டம்: 3 பேர் பலி!

பிரிட்டனின் தென்கிழக்கில் உள்ள ரீடிங் நகரில் நேற்று மாலை ஒரு பூங்காவிற்குள் புகுந்த மர்ம நபர் கண்ணில்பட்ட மக்களைச் சரமாரியாகக் கத்தியால் குத்தியதில் 3 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் 3 பேர் ஆபத்தான காயங்களுடன் உள்ளனர்.

இந்தத் தாக்குதல் தீவிரவாதச் செயலோடு தொடர்புடையதா என்பது குறித்து பிரிட்டன் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட 25 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர் லிபியா நாட்டைச் சேர்ந்தவர் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here