கடந்த அரசு ஆட்சியிலிருந்தால் மக்கள் கொரோனாவினால் இறந்திருப்பார்கள்!

கடந்த அரசாங்கம் இப்போது அதிகாரத்தில் இருந்திருந்தால் மக்களில் அதிகமானோர் கொரோனா வந்து இறந்திருப்பார்கள். கோட்டபாய ராஜபக்ஸவின் தலைமையிலான அரசாங்கம் அவ்வாறான நிலைமையை தடுத்துள்ளது என முன்னாள் வன்னி பாரளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுன கட்சியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான காதர் மஸ்தான் தெரிவித்தார்.

நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சூரிய கட்டைகாட்டு பகுதியில் உள்ள மாதர் பெண்கள் அமைப்பை நேற்று சனிக்கிழமை (20) மதியம் சந்தித்து கலந்துரையாடும் போது அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த அரசாங்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து ஆளும் கட்சியாகவே செயற்பட்டது.

கடந்த காலங்களில் தமிழ் கட்சிகள் சில கூறிய உரிமை, தேசியம் ஆகியவற்றை பெறுவதற்காக பல்வேறு விடயங்களை சலுகைகளை அரசிடம் பெறவில்லை.

எங்களுக்கு வேலை வாய்பு இல்லை என தமிழ் மக்களின் பிரதான கட்சி ஒன்றின் தலைவர் தெரிவித்திருந்தார். ஆனாலும் அவர்கள் ஆளும் கட்சியில் இருந்தார். அதன் மூலம் கம்பரலிய போன்ற பல்வேறு திட்டங்களை மேற்கொண்டது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாய ராஜபக்ஸ தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார். அவருக்கு சிறுபான்மை சமுகத்தில் அதிக வாக்குகள் கிடைத்த இடம் வன்னி தேர்தல் தொகுதியாக உள்ளது.

தேர்தல் காலப்பகுதியில் தமிழ் கட்சிகள் பலர் கோட்டபாய ராஜபக்ஸ வெற்றி பெற்றால் வெள்ளைவான் வரும் என பல பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டனர். ஆனாலும் இந்த 8 மாத காலப்பகுதியில் சிறப்பான ஒரு ஆட்சியை ஜனாதிபதி நடாத்தியுள்ளார்.

மக்களின் வாக்குகளை பெறுவதற்காகவே இவ்வாறு கருத்துக்களை கடந்த தேர்தலில் அரசியல் கட்சியினர் பலர் தெரிவித்தனர். தற்போதும் தெதிவிக்கின்றனர்.

அதே நேரத்தில் கடந்த அரசாங்கம் இப்போது அதிகாரத்தில் இருந்திருந்தால் மக்களில் அதிகமானோர் கொரோனா வந்து இறந்திருப்பார்கள். கோட்டபாய ராஜபக்ஸவின் தலைமையிலான அரசாங்கம் அவ்வாறான நிலைமையை தடுத்துள்ளது.

மேலும் இந்த தேர்தலில் பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவுடன் ஆட்சி அமையும் சந்தர்ப்பம் உள்ளது.

எனவே கடந்த தேர்தலில் விட்ட தவறை மீண்டும் விடாமல் ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து எமது அபிவிருத்தி, உரிமை என அனைத்தையும் ஆளும் கட்சியில் இருந்தாலே பெற முடியும். எனவே பொதுஜன பெரமுன கட்சிக்கு வாக்குளை அளித்து வெற்றி பெற செய்யுங்கள் என அவர் கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here