இந்தவார ராசி பலன் (21.6.2020- 27.6.2020)

புதன், சுக்கிரன், சந்திரன் உதவும் நிலையில் உள்ளனர். எல்லோரிடமும் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வீர்கள். சிலர் எதிர்கால தேவைக்காக வங்கிகளில் தங்களின் இருப்பை அதிகப்படுத்திக் கொள்வர். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடி வரும். புதிதாக தொழில் ஆரம்பிக்க முயற்சி செய்பவர்கள் வெற்றி அடைவார்கள். நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. அலுவலகத்தில் உள்ள நிலுவைப் பணிகளை விரைவாக முடித்து மேலதிகாரியிடம் பாராட்டைப் பெறுவீர்கள்.

பரிகாரம் : மீனாட்சி வழிபாடு சகல நன்மை தரும்.

ராகு, செவ்வாய் அனுகூலமான இடங்களில் உள்ளனர். எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வளரும். காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு. உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். பூர்வ சொத்தை விற்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பர். பணியாளர்களுக்கு அலைச்சல் இருந்தாலும் அதற்கேற்ற பயனும் பெறுவர். பிடித்த இசையைக் கேட்பதன் மூலம் மனஅமைதியை பெறலாம். கணவன், மனைவி இடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

பரிகாரம் : சாஸ்தா வழிபாடு துன்பம் போக்கும்.

புதன், சந்திரன் அதிர்ஷ்டத்தை அள்ளித்தர காத்திருக்கின்றனர். கணவன், மனைவி இடையே புரிதல் மேம்படுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணவரவு இருந்தாலும் செலவினங்கள் சற்று கூடுதலாக இருக்கும். தாயின் உடல்நிலை சீராக இருக்கும். அலுவலகப் பணிகளில் பல குறுக்கீடுகள் வந்தாலும் அதை சாமர்த்தியமாக சமாளித்து வெற்றி காண்பீர்கள். உறவினருடன் இருந்து வந்த மனஸ்தாபங்களை உங்களின் மனைவி சரிசெய்துவிடுவார். புதிய தொழில் செய்வதற்கான முயற்சிகள் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். மாணவர்கள் சிலருக்கு வாழ்க்கைக்கு தேவையான நல்ல புத்தகங்களை படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

பரிகாரம் : துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.

புதன், சுக்கிரன், ராகு நல்ல நிலையில் உள்ளனர். தன்னம்பிக்கையுடன் பொது நல விஷயத்தில் ஈடுபட்டுப் பாராட்டைப் பெறுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த பணவரவு உண்டு. பணியாளர்களுக்கு இருந்த கவனச்சிதறல் நீங்கி பணியில் ஆர்வம் கூடும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களின் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். கணவன், மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். கடந்த காலத்தில் செய்த தவறுகளை எண்ணி வருந்தினாலும் பின் அதிலிருந்து விடுபடுவீர்கள். மகளின் திருமண யோகம் கைக்கூடும். குடும்பத்தினரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள்.

பரிகாரம் : தன்வந்திரி வழிபாடு தொழிலில் உயர்வு தரும்.

சூரியன், புதன், ராகுவால் கூடுதல் நற்பலன் கிடைக்கும். மனம் தளறாமல் முயற்சிகளை தொடர்வீர்கள். அலுவலகத்தில் உங்களின் நேர்மையான நடவடிக்கையால் அனைவரையும் தன்வசப்படுத்தும் திறமை கைவரும். குடும்பத்தின் ஒற்றுமை குறைவதற்கான வாய்ப்பு இருப்பதால் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். பெண்கள் முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பணவரவுகள் ஏற்ற, இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதற்கான சூழல் உருவாகும்.

சந்திராஷ்டமம் : 14.6.2020 காலை 6:00 – 16.6.2020 அதிகாலை 4:47 மணி
பரிகாரம் : சாஸ்தா வழிபாடு துன்பம் போக்கும்.

புதன், ராகு, சுக்கிரன் சுபபலன் தரும் விதத்தில் அமைந்துள்ளனர். சவால்களை எதிர்கொண்டு கடுமையாக உழைத்து வெற்றி காண்பீர்கள். நிதி விவகாரங்களில் அதிருப்தியான நிலை நிலவுவதால் கவனம் அவசியம். எதிர்மறை எண்ணங்களை அகற்றினால் மனஅழுத்தத்திலிருந்து விடுபடலாம். நண்பர்களிடம் கடந்த கால நினைவுகளை கூறி மகிழ்ச்சி கொள்வீர்கள். கணவன், மனைவி இடையே நெருக்கம் குறைய வாய்ப்பு இருப்பதால் பேச்சில் நிதானம் தேவை. அலுவலகத்தில் மற்றவர்கள் செய்ய தயங்கும் செயல்களை எளிதாக செய்து முடிப்பீர்கள். பெண்களுக்கு தந்தையின் அன்பும், ஆதரவும் உண்டு.

பரிகாரம் : குரு வழிபாடு சுபவாழ்வு தரும்.

புதன், சந்திரன், சுக்கிரன் அனுகூலமாக உள்ளனர். நீண்ட நாள் கனவு நிறைவேறுவதால் மனதில் நிம்மதி நிலவும். அலுவலகத்தில் உள்ள பிரச்னைகளை தீர்ப்பதற்கு நண்பரின் ஆலோசனைகளை பயன்படுத்துவீர்கள். வெளியூரில் இருக்கும் மகனிடம் இருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களை அனுசரித்து சென்றால் நீங்கள் எதிர்பார்த்த உதவியை பெறலாம். புதிய வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். திருமணமாகி குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு இது யோகமான கால கட்டமாகும். சோதனைகளை சாதனைகளாக மாற்ற வேண்டுமானால் எதிலும் அவசரம் வேண்டாம்.

பரிகாரம் : முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.

புதன், சுக்கிரன், சந்திரன் நன்மை செய்யும் அமைப்பில் உள்ளனர். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு புதிய பதவிகள் தேடி வரும். தொழில் தொடங்குவதற்காக வங்கியில் விண்ணப்பித்த கடன்கள் கிடைப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள். நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து குடும்பத்தினரின் மனக்கசப்புக்கு ஆளாக வேண்டாம். பணப்புழக்கம் அதிகரிப்பதால் பழைய கடன்களை அடைக்கும் வாய்ப்புகளை பெறுவீர்கள். சொந்த விஷயங்களுக்காக அடுத்தவரின் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது.

சந்திராஷ்டமம் : 21.6.2020 காலை 6:00 – 23.6.2020 காலை 8:24 மணி
பரிகாரம் : ராமர் வழிபாடு ஆரோக்கியம் தரும்.

புதன், செவ்வாய், சந்திரன் கூடுதல் நற்பலன்களை தரும் விதத்தில் உள்ளனர். தாழ்வு மனப்பான்மை நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பாலினத்தவரால் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். எதிர்பாராத வரவால் கடன் பிரச்னை குறையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்த்தால் எதிர்பார்த்த லாபத்தை பெறலாம். மேலதிகாரிகள் நிலுவைப் பணிகளை முடிப்பதற்கு உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வயதில் பெரியவர்களுடன் நட்புக் கொண்டு அவர்களின் அனுபவத்தை பெறுவீர்கள். வாகன மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும்.

சந்திராஷ்டமம் : 23.6.2020 காலை 8:25 – 25.6.2020 பகல் 1:03 மணி
பரிகாரம் : பைரவர் வழிபாடு பல நன்மைகள் தரும்.

புதன், சுக்கிரன் அதிர்ஷ்டம் தரக்கூடிய அமைப்பில் அமர்ந்துள்ளனர். பெண்கள் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரவு திருப்தி தரும். குடும்பத்தினர் உங்களின் ஆலோசனையை ஏற்காமல் தானாக எதையும் செய்வது மன வருத்தத்தை தரலாம். பிள்ளைகளின் எதிர்கால நலனில் மிகுந்த அக்கறை கொள்வீர்கள். கடந்த காலத்தில் உங்களைத் துாற்றியவர்கள் போற்றுவார்கள். நெருங்கிய ஒருவரின் சந்திப்பால் கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். தாயின் அன்பு, ஆசியை பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் : 25.6.2020 பகல் 1:04 – 27.6.2020 மாலை 4:09 மணி
பரிகாரம் : பெருமாள் வழிபாடு நல்வாழ்வு தரும்.

வாழ்வில் முன்னேற அதிகப்படியான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்த்து செயல்பட்டவர்கள் ஒதுங்கி விடுவார்கள். புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள். உறவினர்களுடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கலைத்துறையினரின் முயற்சிகள் எதிர்பார்த்த பலன் தராமல் போகலாம். அலுவலகத்தில் இருந்த கெடுபிடிகள் குறைந்து கலகலப்பான சூழல் உருவாகும். பெண்கள் அடுத்தவர் கஷ்டங்களை புரிந்து கொண்டு உதவி செய்து நற்பெயரும், பாராட்டையும் பெறுவர். புதிய நண்பர்களிடம் அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம்.

பரிகாரம் : அனுமன் வழிபாடு வெற்றி தரும்.

குரு, சந்திரன் ஆகியோர் சாதகமான அமைப்பில் உள்ளனர். இயந்திரப் பணியாளர்கள் தங்களின் வேலையில் கவனமாக இருக்கவும். குடும்பத்தில் நடக்கும் சுபநிகழ்ச்சிகளால் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் செயலால் பெருமை உண்டாகும். பெண்களுக்கு மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் உள்ள போட்டிகளை எளிதாக சமாளித்து எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். வெளிநாடுகளில் வசிக்கும் நெருங்கிய உறவினர்களிடமிருந்து நல்ல தகவல்கள் வரும். நண்பர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்து நன்மதிப்பை பெறுவீர்கள்.

பரிகாரம் : விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here