‘எனது பெயரை கேட்டதும் பிரபாகரன் காட்டிற்குள் ஓடினார்’: கூழ் ‘குபீர்’!

“யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தராக என்னை நியமிக்கும்படி பிரபாகரனிடம் பேசுவதற்கு சிவாஜிலிங்கம் காட்டிற்கு சென்றார். எனது விடயத்தை பேச வருகிறார் என தெரிந்ததும் பிரபாகரன் இன்னும் ஆழமான காட்டிற்கு ஓடிவிட்டார்“

இவ்வாறு குபீர் கருத்தை தெரிவித்துள்ளார் ரட்ணஜீவன் கூழ்.

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரான ரட்ணஜீவன் கூழ், தனியார் வானொலியொன்று வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்தார்.

“என்னை துணைவேந்தராக நியமிக்கும்படி நான் புலிகளுடன் பேசவில்லை. ஆனால் என் சார்பில் சிலர் பேசினார்கள். ஒருமுறை சிவாஜிலிங்கம் என் சார்பில் பிரபாகரனுடன் பேச காட்டுக்கு சென்றிருந்தார். ஆனால், என் சார்பாக வருவதை அறிந்ததும் பிரபாகரன் இன்னும் காட்டுக்குள் ஓடிவிட்டதாக அறிந்தேன்.

யாழ் ஆயரும் என சார்பில் புலிகளிற்கு கடிதம் எழுதினார். பல்கலைகழக கல்வியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாமென கேட்டிருந்தார். ஆனால் புலிகள் அதை கணக்கிலெடக்கவில்லை“ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here