பங்களாதேஷ் முன்னாள் கப்டனுக்கு கொரோனா!

பங்களாதேஷ் அணியின் முன்னாள் கப்டன் மஷ்ரஃப் மொர்டசா, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி பங்களாதேஷ்ச ஊடகத்தில் வெளிவந்துள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

வியாழன் அன்று மொர்டசாவுக்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. வெள்ளியன்று அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் பொசிடிவ் என முடிவு வந்துள்ளது. தற்போது உடல்நலன் தேறி வருகிறார். வீட்டில் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார். குடும்பத்தினர் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம், சிம்பாவேவுக்கு எதிரான தொடருக்குப் பிறகு கப்டன் பதவியிலிருந்து மொர்டசா விலகினார். இதனால் ஓய்வு அறிவிப்பை அவர் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பங்களாதேஷ் அணிக்காக 36 டெஸ்ட், 220 ஒருநாள், 54 ரி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

பிரபல பங்களாதேஷ் வீரர் தமிம் இக்பாலின் சகோதரர் நவீஸ் இக்பாலும், பொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் பங்களாதேஷ் முன்னாள் வீரர் ஆஷிகுர் ரஹ்மான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். பாகிஸ்தானில் சாஹித் அப்ரிடி, தவீக் உமர், ஸபர் சர்பராஸ் ஆகிய மூன்று வீரர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here