UPDATE: யாழில் அதிரடிப்படையின் துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் பலி!

மணல் அள்ளச் சென்றது என நம்பப்படும் உழவு இயந்திரத்தின் மீது விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (20) மாலை முகமாலை பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

சட்டவிரோதமாக மணல் அள்ள வந்தவர்களை கைது செய்ய அதிரடிப்படையினர் நடத்திய நடவடிக்கையில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

மணல் ஏற்ற சென்றதாக நம்பப்படும் உழவு இயந்திரத்தின் மீது அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்இளைஞன் கொல்லப்பட்டுள்ளார். உழவு இயந்திரத்தின் பின்பெட்டியில் நான்கு இளைஞர்கள் இருந்தனர். இதில் கெற்பெலியை சேர்ந்த திரவியம் இராமகிருஸ்ணன் (24) வயதான இளைஞன் ஒருவரின் தலையில் துப்பாக்கிச்சூடு பட்டது.

சடலம் பளை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here