யாழில் 18 வயதிற்குட்பட்ட ரௌடிக்குழு வாள்வெட்டு முயற்சி… பொதுமக்கள் வளைத்துப் பிடித்து நையப்புடைப்பு!

யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டுத் தாக்குதல் நடத்த வந்த ரௌடிக் குழுவொன்றின் உறுப்பினர்களை பொதுமக்களே மடக்கிப்பிடித்துள்ளனர். இரண்டு ரௌடிகள் மடக்கிப்பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த ரௌடிக்குழுவில் 17- 19 வயதிற்குட்பட்டவர்களே அங்கம் வகிக்கிறார்கள்.

நேற்று (19)மாலை இந்த சம்பவம் நடந்தது.

அரியாலை, நாயன்மார்கட்டு பகுதியில் ரௌடிக்குழுவொன்று ஒருவர் மீது தாக்குதல் நடத்துவதற்கு வாளுடன் அங்கு சென்றுள்ளனர். இதையடுத்து ஒன்று திரண்ட பிரதேசவாசிகள் ரௌடிகளை வளைத்துப் பிடிக்க முயன்றனர்.

இரண்டு ரௌடிகள் சிக்கினர். மற்றையவர்கள் தப்பியோடி விட்டனர்.

சிக்கிய இரண்டு ரௌடிகளையும் சின்னாபின்னப்படுத்தி விட்டு, பொலிசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களை பொலிசாரும் முறையாக கவனித்து நடத்திய விசாரணையில், முழு விபரத்தையும் கக்கியுள்ளனர்.

உடனடியாக விரைந்து செயற்பட்ட பொலிசார், மேலும் ஐந்து பேரை நேற்று இரவே கைது செய்தனர்.

கைதான அனைவரும் 17,18 வயதானாவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here