‘சேர் உங்களை பற்றி நன்றாக புகழ்ந்து பேசியுள்ளேன்… துணைவேந்தராக்குங்கள்’: கூழின் டீலை அம்பலமாக்குகிறார் டக்ளஸ்!

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ரட்னஜீவன் கூழ், போகுமிடங்கள் எல்லாம் குழப்பங்களை ஏற்படுத்தும் ஆள். அதனால்தான் அவரை யாழ்ப்பாண பல்கலைகழக உபவேந்தராக சிபாரிசு செய்யவில்லை. அந்த கோபமே அவருக்கு என் மேல் உள்ளது என தெரிவித்துள்ளார் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா.

இன்று (20) கொழும்பு தனியார் வானொலியொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.

“இரட்ணஜீவன் கூழ் என்னிடம் வந்து யாழ் பல்கலைகழக துணைவேந்தராக சிபாரிசு செய்யும்படி கோரினார். யாழ்ப்பாணத்திற்கு போய் நீங்கள் சமாளிக்க மாட்டீர்கள் என தெரிவித்தேன். அவர் இல்லையென மறுத்து ஒற்றைக்காலில் நின்றார். அன்றைய சந்திரிக்கா அரசிடம் நான் சிபாரிசு செய்தேன்.

பின்னர் அவர் கிளிநொச்சிக்கு போய் புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்திக்க முயன்றார். ஆனால், பிரபாகரன் சந்திக்கவில்லை. தமிழ் செல்வனை சந்தித்தார். பின்னர் புலிகள்தான் ஏகபிரதிநிதிகள் என அறிவித்து விட்டு நாட்டை விட்டு தப்பியோடினார். அவரை துணைவேந்தராக சிபாரிசு செய்த எனக்கு அரசில் சங்கடம் ஏற்பட்டது

பின்னர்தான் அறிந்தேன், அவர் போகுமிடங்களிலெல்லாம் குழப்பங்களை ஏற்படுத்துபவர் என்பதை.

சிலகாலம் கழித்து அமெரிக்காவிலிருந்த தொலைபேசியில் அழைத்து, “சேர்…. எனக்கு சம்பளம் தருகிறார்கள் இல்லை“ என சொன்னார். நீங்கள் பல்கலைகழகம் போகாமல் எப்படி சம்பளம் பெறுவதென கேட்டேன்.

பின்னர் நாட்டிற்கு வந்து பேப்பர் கட்டிங்குடன் வந்தார். “சேர், எல்.எல்.ஆர்.சி ஆணைக்குழுவில் யாரும் சொல்லாத அளவில் உங்களை பற்றி நான் நன்றாக சொல்லியுள்ளேன். எனக்கு பல்கலைகழக துணைவேந்தர் பதவிக்கு சிபாரிசு செய்யுங்கள்“ என கேட்டார்.

நான் சிபாரிசு செய்யவில்லை. வீழ்ந்திருந்த பல்கலைகழகத்திற்கு பொருத்தமானவரையே நியமிக்க வேண்டும்.

இதனால் ஆத்திரமடைந்த கூழ், நெடுந்தீவு மக்களை எம்முடன் தொடர்புபடுத்தி அவதூறு பரப்பினார். இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தேன். பேராசிரியர் என சொல்பவர் நீதிமன்ற வழக்கை எதிர்கொள்ளாமல், நாட்டைவிட்டு தப்பியோடினார்.

பின்னர் நல்லாட்சி வந்ததும், அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி சுத்துமாத்து செய்து நாட்டுக்கு வந்துள்ளார்“ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here